அந்திபகல் சிந்தும்விழி சொந்தமொன்று நாடவிதி
மந்தநிலை போக்கி விடுமோ -இல்லை
முந்தியிடி தந்தவலி சிந்தையிலே ஆடசதி
வெந்தணலில் வீழ்த்தி சுடுமோ !
பட்டகுறை விட்டகல கட்டிலிடை சிட்டுவர
முட்டியொளி மூச்சு தருமோ - காதல்
இட்டசிறை கட்டகல தொட்டிலிடை மொட்டுவர
பட்டுமொழி பேச்சு வருமோ!